4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா | எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா | நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ் | கோவாவில் தெருவோர கடைக்காரரிடம் சண்டை போட்ட ‛ஜெயிலர்' வில்லன் | பிளாஷ்பேக்: நடிப்பில் சாதித்து, தயாரிப்பு, இயக்கத்தில் சரிவை சந்தித்த 'நடிகையர் திலகம்' சாவித்திரி | இந்த விஷயம் இருந்தால் மட்டும் கதை சொல்லுங்க : மிஸ் யூ இயக்குனரிடம் ஜிப்ரான் போட்ட கண்டிஷன் | நடிகர் தர்ஷனுக்கு ஆபரேஷன் செய்வதில் தாமதம் : ஜாமீனை நீட்டிக்கும் முயற்சியா? | ரஜினி இதையெல்லாம் விட்டுடலாமே : ஜானகி அம்மாவிடம் வருத்தப்பட்ட எம்ஜிஆர் | புஷ்பா 2 சர்ச்சை : வெளிப்படையாகப் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத் | அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு |
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிம்புவின் ஜோடியாக சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சனா கான். தொடர்ந்து பரத்துடன் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் மட்டுமே நடித்த அவர் அதன்பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகளை பெறவில்லை. இடையில் மீண்டும் சிம்புவுடனேயே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் இணைந்து நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சூரத்தை சேர்ந்த முப்தி அனாத் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை ஒன்றுக்கும் தாயானார் சனா கான்.
இந்த நிலையில் லண்டனுக்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் சனா கான். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லண்டனில் சென்று இறங்கிய அவர் உட்பட நூற்றுக்கணக்கான பேருக்கு அவர்கள் கொண்டு சென்ற லக்கேஜ் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. விமான நிலையத்தில் பல மணிநேரம் தனது உடைமைகளை தேடி அவர் அலைக்கழிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஓட்டலில் தங்கி இருக்கும் சனா கான் இதுகுறித்து தொடர்ந்து வீடியோக்களையும் அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார்.
அதில் லண்டன் வந்து இறங்கி இரண்டு நாட்கள் ஆகியும் தனது லக்கேஜ் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லை என்றும், கடந்த இரண்டு நாட்களாக லக்கேஜ் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் மாற்றுத் துணி கூட இல்லாமல் ஒரே உடையை அணிந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது குழந்தைக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 5 உடை மற்றும் 10 டயபர் மாற்ற வேண்டிய சூழலில் இருப்பதால் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.