குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்பட்ட ஏஆர் ரஹ்மானின் இமேஜை கடந்த வாரம் அவர் சென்னையில் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.
பல்லாயிரம் பேர் இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழையக் கூட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நடந்தது என்றெல்லாம் கூட குற்றச்சாட்டுகள் எழுந்தது. கடந்த வாரம் முழுவதும் டிவிக்களில் விவாதம் நடத்தும் வரை அந்த இசை நிகழ்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
கடும் விமர்சனங்கள் எழுந்த பின் ஏஆர் ரஹ்மான் அவரது டுவிட்டர் தளத்தில் டிக்கெட்டுகளின் காப்பியையும், அவர்கள் குறைகளையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதன்பின் ரஹ்மான் தரப்பிலிருந்து 4000 பேருக்குக் கட்டணத் தொகையைத் திருப்பி அனுப்புவதாக செய்திகள் வெளிவந்தன. பல சினிமா பிரபலங்களும் ரஹ்மானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்தோ, பணம் திருப்பித் தரப்படுவது குறித்தோ சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவையும் ரஹ்மான் பதிவிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு அப்டேட் தரும் ரஹ்மான் கடந்த ஒரு வார காலமாக அமைதி காத்து வருகிறார்.