‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் |
புகழ்பெற்ற கிராமிய பின்னணி பாடகி விஜயலட்சுமி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாறு, அழகியல் நுண்கலைத் துறையின் நாட்டுப்புறக் கலை மையத்தின் பேராசிரியையாகப் பணிபுரிந்தவர். இவரது கணவர் முனைவர் நவநீத கிருஷ்ணணும் இதே துறையில் பேராசிரியராக விளங்கியவர். பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலை வடிவங்களை கண்டறிந்து அதனை கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை நிகழ்ச்சியாக நடத்தி வந்தார். நாட்டார் கலை வடிவங்களை ஒளி ஒலி நாடாக்களை சேகரித்து தமிழ் சமூகத்திற்கு அளித்தவர்.
தன்னை தேடி வந்த பல சினிமா வாய்ப்புகளை மறுத்தவர், 1990ல் வெளிவந்த 'புதுப்புது ராகங்கள்' என்ற ஒரே படத்தில் மட்டும் பாடகியாகவே நடித்துள்ளார். பாடகி கேரக்டர் என்பதால் நடிக்க ஒத்துக்கொண்டார். இந்த படத்தை ஆதவன் என்பவர் இயக்கி இருந்தார். ஆனந்த்பாபு, சித்தாரா, சரண்ராஜ், நாகேஷ், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.