பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சென்னையில் நேற்று திருமணம் செய்த ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், தனது மனைவி அகிலாவுடன் இன்று(நவ., 1) அளித்த பேட்டி : டூரிஸ்ட் பேமிலி வெற்றிக்கு பின் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிக்கவும் இயக்கவும் செய்வேன். என் இணை இயக்குனர் மதன் இயக்கத்தில் நான் நடித்து வரும் பெயரிடப்படாத படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ரிலீஸ். அடுத்த ஆண்டு ஒரு படம் இயக்க உள்ளேன்.
பள்ளி பருவ காலத்தில் இருந்தே அதாவது 6வது படிக்கிற காலத்தில் இருந்து மனைவி அகிலாவை காதலித்தேன். இப்பொழுது திருமணத்தில் முடிந்துள்ளது. அவர் கேட்ட திருமண பரிசாக, டூரிஸ்ட் பேமிலி தயாரிப்பாளர் வழங்கிய சொகுசு காரில் அவருடன் சென்னை, ஈசிஆர் பகுதியை சுற்றி வந்தேன். வருங்காலத்தில் அவருடன், குட்டி அபி உடன் சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு செல்ல ஆசை. தவிர, நான் அவருக்கு சில திருமண பரிசு கொடுத்தேன். அது பர்சனல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.