ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
விஜய் டிவியின் டாப் தொடரான பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி - அருண் ஜோடிக்கு அடுத்தபடியாக, அகிலன் - கண்மணி ஜோடி தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது. இந்நிலையில் அகிலன் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததன் காரணமாக சீரியலை விட்டு வெளியேறினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அகிலன் - கண்மணி காம்போவை மிஸ் செய்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இருவரும் சேர்ந்து ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். 'ஹோரா' என்ற லோகேஷ் சந்திரசேகரின் ஆல்பம் பாடலில் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். செம ரொமாண்டிக்கான இந்த பாடலின் விஷூவல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.