பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? |

சர்ச்சைக்குரிய கருத்துகள், காட்சிகளை கொண்ட படங்கள் பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. சில படங்கள் வெளிவராமலேயே போயிருக்கிறது. அப்படியான ஒரு படம் 1954ம் ஆண்டு வெளிவந்த 'சொர்க்கவாசல்'.
அப்போது அரசியலில் தலைவராக உருவாகி வந்த அண்ணாதுரை சொர்க்கவாசல் என்ற ஒரு நாடகத்தை எழுதி, அதனை அவரது கட்சியினர் நடத்தி வந்தனர். இந்த நாடகம் நல்ல வரவேற்பை பெறவே பின்னர் அது திரைப்படமானது.
கே.ஆர்.ராமசாமி, பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலிதேவி, வீரப்பா, ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை, ஏ.கலசலிங்கம் இயக்கினார். விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை அமைத்தனர்.
இறந்தவர்களுக்கு சொர்க்கத்தை காட்டுகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பூஜைகள் செய்து மக்களையும், மன்னர்களையும் ஏமாற்றுவது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் கடவுள் நம்பிக்கையாளர்களை கிண்டல் செய்தது.
இதனால் படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் படத்திற்கு சான்றிதழ் தரக்கூடாது என்று தணிக்கை குழுவிடம் மனு அளித்தனர். இதை தொடர்ந்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டும், பாடல்களில் சில வரிகளை நீக்கியும் சான்றிதழ் வழங்கப்பட்டது.