தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

அன்றைக்கிருந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு இளையராஜாவின் கால்ஷீட் கிடைப்பது மிகவும் அரிது. எப்படியோ கஷ்டப்பட்டு இளையாராஜாவை நெருங்கி கதை சொல்லி விடுவார்கள். ஓரிரு நாட்களிலேயே கதைக்கு ஏற்ற மாதிரி நான்கைந்து பாடல்களை தயார் செய்து கொடுத்து விடுவார். பாடல்களை வாங்கிய தயாரிப்பாளர்களால் சில காரணங்களால் படம் தயாரிக்க முடியாமல் போய்விடும். இளையராஜாவின் பாட்டுகள் மட்டும் அவர்கள் கையில் இருக்கும்.
இதை அறிந்து கொள்ளும் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அந்த பாடல்களை விலைக்கு வாங்கி, அதற்கேற்ப கதைகள் எழுதி படம் தயாரித்து விடுவார்கள், இளையராஜா என்ற பெயருக்கும், பாடல்களுக்காகவுமே படம் வெற்றி பெற்று விடும்.
அப்படி உருவான படங்களில் முக்கியமானது 'பாரு பாரு பட்டணம் பாரு'. 'பிள்ளைநிலா' வெற்றிக்கு பிறகு அடுத்து ஒரு காமெடி படம் இயக்க விரும்பினார் மனோபாலா. இதற்கான கதை தேடியபோது ஒரு தயாரிப்பாளரிடம் 5 பாடல்கள் இருப்பதை கேள்விப்பட்டு தயாரிப்பாளர் கலைமணி அந்த பாடல்களை வாங்கி வந்து அதற்கேற்ப ஒரு கதை எழுதினார். அந்த கதையை மனோபாலா இயக்கினார்.
ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட நாயகன் அதனால் சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியாக சொன்ன படம். மோகன், ரஞ்சனி நடித்தனர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தார். படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை, பாடல்கள் ஹிட்டாது. இதே படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு பெரிய வெற்றியை பெற்றது.