காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள படம் ‛சொர்க்க வாசல்'. அவருடன் சானியா ஐயப்பன், நட்டி நடராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் நவம்பர் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, ‛‛இந்த சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் நன்றாக உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் சில காட்சிகளை எனக்கு காண்பித்தார்கள். அந்த காட்சிகளில் ஆர்.ஜே.பாலாஜி மிக சிறப்பாக நடித்திருந்தார். அவர் ஒரு நல்ல நடிகராக உருவாகிவிட்டார் என்பதை அதன் மூலம் தெரிந்து கொண்டேன்.
அதோடு, இந்த சொர்க்கவாசல் படத்தில் ஜெயில் காட்சிகள் நிறைய உள்ளன. அடுத்து நான் இயக்கப் போகும் கைதி-2 படத்திலும் ஜெயில் காட்சிகள் உள்ளன. அதனால் இந்த படம் திரைக்கு வரும்போது அதை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் கைதி-2 கதையில் சில திருத்தங்களை செய்வேன்'' என்று சிரித்தபடியே கூறினார் லோகேஷ் கனகராஜ்.