நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் | சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் | முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா | ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா? | ஏழுமலை 2ம் பாகம் பணியில் அர்ஜூன் | சென்னையில் 3 தெருக்களுக்கு இசைக் கலைஞர்கள் பெயர் |

ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி, அதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. பின்னர் சல்மான்கான் நடிக்கும் படத்தை அவர் இயக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது அட்லி தனது அடுத்த படத்தை தமிழில் இயக்குவதாகவும், அந்த படத்தில் விக்ரம், தனுஷ், பகத் பாசில் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அட்லியின் புதிய படம் குறித்து ஏற்கனவே பல செய்திகள் வெளியான நிலையில், தற்போது இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.




