இந்தவாரம் வரிசை கட்டும் படங்கள் : பிப்., 14ல் இவ்வளவு படங்கள் ரிலீஸா...! | ஜாலியா வாங்க.. ஜாலியா போங்க..: தனுஷின் ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' டிரைலர் வெளியீடு | பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா |
பழம்பெரும் மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராமு காரியத். 'திரமாலா' என்ற படத்தை 1953ம் ஆண்டு விமல்குமார் மற்றும் பி.ஆர்.எஸ்.பிள்ளையுடன் இணைந்து இயக்கினார். 1954ஆம் ஆண்டில் 'நீலக்குயில்' படத்தை பி.பாஸ்கரனுடன் இணைந்து இயக்கி அறிமுகமானார். இந்த படம் மலையாளத்தின் முதல் சிறந்த படமாக கருதப்படுகிறது.
நீலக்குயிலுக்குப் பிறகு, மின்னாமினுங்; புத்ரன்; மூடுபடம்; பரதநாட்டியம், ஏழுராத்திரிகள், அபயம், மாயா, நெல்லு, த்வீபு, அம்முவின்றே ஆட்டின்குட்டி, மலங்காற்று உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அனைத்து படங்களுமே மலையாள சினிமாவின் முக்கியமான படங்களாக இப்போதும் பேசப்படுகிறது.
1985ம் ஆண்டு இவர் இயக்கிய 'செம்மீன்' படம் மலையாள சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. தமிழில் '16 வயதினிலே' படம் போன்று இப்போதும் செம்மீன்தான் நம்பர் ஒன் படமாக இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியான மது மற்றும் ஷீலா ஆகியோர் புகழின் உச்சிக்கே சென்றனர். செம்மீன் மலையாளத் திரையுலகின் திருப்புமுனையாக கருதப்படுகிறது. தகழி, சிவசங்கர பிள்ளையின் நாவலின் தழுவலான இப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் மலையாளத் திரைப்படமாகும். 1972ம் ஆண்டு தமிழில் 'கண்ணம்மா' என்ற படத்தை தயாரித்தார். இதில் முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்திருந்தனர். லட்சுமணன் என்பவர் இயக்கி இருந்தார். பாடல்கள் வெற்றி பெற்றபோதும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.