ஓணம் வாழ்த்து எதிரொலி - கடும் விமர்சனத்தில் சிக்கிய விஜய்! | ராகவா லாரன்ஸின் 25வது படத்தை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்! | அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்த சிவகார்த்திகேயன்! | பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் வரிசைக்கட்டும் படங்கள்! | சிம்புவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் தி கோட் படத்தில் நடந்த மாற்றம்! | லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த பிரபலங்கள்! | காதலரை கரம்பிடித்த மேகா ஆகாஷ்: சென்னையில் எளிய முறையில் நடந்த திருமணம் | மக்களின் ஆதரவு உற்சாகப்படுத்துது...!: சந்தோஷத்தில் சஞ்சனா | போதை மறுவாழ்வு மையத்தில் ஸ்ரீகுமார் அட்வைஸ்! | பெண் குழந்தைக்கு தாயான ரித்திகா! |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பேர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். தமிழைத் தவிர வேறு மொழிகளில் அவர் என்று பார்த்தால் தமிழில் பெரும் வெற்றி பெற்ற 'முதல்வன்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'நாயக்' படத்தை மட்டும் இயக்கினார். 2001ல் வெளிவந்த அந்தப் படம் தோல்வியைத் தழுவியது.
அந்தப் படம் தவிர வேறு மொழிகளில் அவர் படம் இயக்காமல் இருந்தார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 பிப்ரவரியில் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் சரணின் 15வது படத்தை ஷங்கர் இயக்கப் போவதாக அறிவிப்புகள் வந்தது. அந்த வருடத்தில் அக்டோபர் மாதம் ஆரம்பமான படப்பிடிப்பு கடந்த மூன்று வருடங்களாக நடந்து வருகிறது.
ஷங்கர் படத்தை இயக்கினாலும் அவரது இத்தனையாவது படம் என்று சொல்லாமல் ராம்சரணின் 15வது படம் என்பதை 'ஆர்சி 15' என்றே படத்திற்கு 'கேம் சேஞ்சர்' எனப் பெயர் வைக்கும் வரை அழைத்து வந்தனர்.
சுமார் 300 கோடி செலவில் தயாராகி வருவதாக சொல்லப்படும் படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. அதை முடித்து, இறுதிக் கட்டப் பணிகள் ஓரளவிற்கு முடிந்தபின்தான் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்கள்.
ஷங்கர் இயக்கி கடந்த வாரம் வெளிவந்த 'இந்தியன் 2' படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தன. தெலுங்கில் சுமார் 25 கோடி அளவிற்கு விற்கப்பட்ட படம் இதுவரையில் 19 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இன்னும் 13 கோடி வரை வசூலித்தால் மட்டுமே நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
28 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர், கமல்ஹாசன் என தமிழில் இரண்டு ஜாம்பவான்கள் இணைந்த 'இந்தியன் 2' படத்திற்கு இப்படி ஒரு நிலையா என தெலுங்குத் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம். ஷங்கரின் இயக்கத்தில் முதன் முதலாக உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' படம்தான் அவரது திறமையை, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படமாக இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்களாம்.
ராம் சரண் நடித்து கடைசியாக வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் 1000 கோடி வசூலைக் கடந்தது. அது போல இந்த 'கேம் சேஞ்சர்' படமும் கடக்க வேண்டும் என ராம் சரண் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
'கேம் சேஞ்சர்' யாருக்கு 'சேஞ்சர்' ஆக இருக்கப் போகிறது யாருடைய எதிர்காலத்தில் 'கேம்' ஆடப் போகிறது என ஒரு பயத்துடனேயே காத்திருக்கிறது தெலுங்குத் திரையுலகம்.