டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
நெட்மெக் புரொடக்ஷன் தயாரிப்பில், உருவாகி உள்ள படம் 'டியர்'. 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், 'ப்ளாக் ஷீப்க் நந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இசை மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், டிரிக்கர், துணிவு, டைனோசர்ஸ் போன்ற படங்களை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஜி.வி.பிரகாசும், ஐஸ்வர்யா ராஜேசும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.