திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

விஷால் தற்போது நடித்து முடித்துள்ள படம் 'மார்க் ஆண்டனி'. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். விஷாலுடன் ரிது வர்மா, எஸ்.ஜே.சூர்யா, சுனில் ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோ சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2018ம் ஆண்டு வெளியான 'இரும்புத்திரை' தான் விஷால் கடைசியாக நடித்து வெற்றியான படம். அதை தொடர்ந்து அவர் நடித்த சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி, லத்தி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது தயாராகி உள்ள 'மார்க் ஆண்டனி' படத்தை அவர் மிகவும் எதிர்பார்க்கிறார். இந்த படத்தின் வெற்றி அவருக்கு முக்கியமானதாகும்.
இதன் காரணமாக படத்தின் புரமோசன்களை பெரிய அளவில் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற 3ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஷால் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நேரு உள் விளையாட்டரங்கில் வருகிற 3ம் தேதி 'மார்க் ஆண்டனி' இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. மாவட்டம் வாரியாக ரசிகர்கள் 300 வாகனங்களில் சென்னை வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தடங்கல் சிறிதாக இருக்கலாம். மிக விரைவில் அணி சேர்வோம், அன்பை விதைப்போம், நமது சந்திப்பு பெரும் விழாவாக அமையும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.