தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் பி வாசு இயக்கத்தில் உருவாகி உள்ளது. லைகா தயாரிக்க, ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆஸ்கர் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் பேசிய வடிவேலு, ''ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும்போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.
இதற்கு முதல் படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த ரெண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற. கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வரவிடாம கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் சுபாஷ்கரன்.
மாமன்னன் படத்த முடித்த பிறகு பி. வாசு என்னை கூப்பிட்டார். அவர் படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசு தான் 70 ஆவது தவிர 35 வயசு மாதிரி இருக்காரு. என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார். பொதுவா அவர் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன் லைனை மட்டும்தான் சொல்வார். இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படியே ஆடிப் போய்விட்டேன்.
சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு. இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். வாழ்த்துக்கள். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன்'' என்றார்.