அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
யு டியுப் வரலாற்றில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பாடல் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றது இதுதான் முதல் முறையாக இருக்கும். லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு வெளியான படம் 'பையா'.
யுவன், நா முத்துக்குமார் கூட்டணியில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டான பாடல்கள். 90ஸ் கிட்ஸ்களின் அதிகமான வரவேற்பைப் பெற்ற பாடல்கள் என்றும் சொல்லலாம். இப்படத்தில் ஹரிசரண், தன்விஷா பாடிய 'துளித் துளி' பாடலின் வீடியோ யு டியுபில் 2014ம் வருடம் செப்டம்பர் மாதம் பதிவேற்றப்பட்டது. சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஒன்பது ஆண்டுகளில் இப்படி ஒரு சாதனை நிகழ்ந்திருப்பது ஆச்சரியமான ஒன்று. யு டியூபைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமா பாடல்களில் யுவன் இசையமைத்து வெளிவந்த 'மாரி 2' படப் பாடலான 'ரவுடி பேபி' பாடல் 1400 மில்லியன் பார்வைகளைக் கடந்து 1500 மில்லியனை நெருங்கி, அதிகப் பார்வைகளைப் பெற்ற தமிழ் சினிமா பாடல் என முதலிடத்தில் உள்ளது.
யுவனின் இசையில் வெளிவந்த 'என்ஜிகே' படப் பாடலான 'அன்பே பேரன்பே' பாடல் 158 மில்லியன் பார்வைகளுடனும், யுவனின் இசையில் வெளிவந்த 'டிக்கிலோனோ' படப் பாடலான 'பேரு வச்சாலும்' பாடல் 124 மில்லியன் பார்வைகளுடனும் 100 மில்லியன் கிளப்பில் உள்ளன. தற்போது யுவனின் 4வது பாடலாக இந்த 'துளித் துளி' பாடல் அந்த கிளப்பில் இணைந்துள்ளது.