பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஸ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரகாஷ்ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதற்கு முன்பு இருவரும் திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தனர். தற்போது 5வது முறையாக தனுஷ், பிரகாஷ் ராஜ் கூட்டணி இணைவதை ரசிகர்கள் மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.




