இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சமீபத்தில் விவாகரத்து குறித்து சோனியா அகர்வால் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி, "இயக்குனராக செல்வராகவன் முரட்டுப்பிடிவாதம் கொண்டவர். ஆனால், சொந்த வாழ்க்கையில் அப்படிபட்டவர் இல்லை, அமைதியானவர். எப்போதும் கதை எழுதிக்கொண்டு தன்னை பிசியாகவே வைத்து இருப்பார். எங்களின் திருமண வாழ்க்கை ஏன் முறிந்தது என்பது எனக்கும், அவருக்கும் மட்டுமே தெரியும். இப்போது அவர் செல்லும் வழியில் எப்படி சந்தோஷமாக இருக்கிறாரோ, அப்படி தான் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம். அவர் என் கண்களுக்கு நண்பராக தெரிய மாட்டார். காதல் செத்துப்போன பிறகு நண்பராக பார்க்க முடியாது. வாழ்க்கையில் மறுபடியும் அவர் முகத்தை பார்க்க மாட்டேன். திருமணம் ஆன புதிதில் நான் நடிக்கக்கூடாது என்று அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினர். அதனால் சினிமாவை விட்டு ஒதுங்க வேண்டி வந்தது. ஆனால், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளேன்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.