சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனரான கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், சில்லியன் மர்பி, எமிலி பிலன்ட், மாட் டாமன், ராபர் டௌனி ஜுனியர் மற்றும் பலரது நடிப்பில் நாளை மறுதினம் ஜுலை 21ம் தேதி வெளியாக உள்ள படம் 'ஓப்பன்ஹெய்மர்'.
ஐமாக்ஸ் கேமராவில் பிரத்யேகமாகப் படமாக்கப்பட்ட இப்படம் ஹாலிவுட் பட ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மாநரங்களில் உள்ள பல தியேட்டர்களில் இப்படத்திற்கான முன்பதிவு அன்று வெளியாக உள்ள தமிழ்ப் படங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2020ல் வெளியான 'டெனட்' படத்திற்குப் பிறகு வெளிவர உள்ள படம் இது. அமெரிக்காவின் இயற்பியல் அறிஞரான ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கை வரலாற்றுப் படமாக 'ஓப்பன்ஹெய்மர்' உருவாகியுள்ளது. இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் 'அணுகுண்டு' உருவாக்கத்தில் இவரது பங்கு பெரியது. அதனால்தான், 'அணுகுண்டின் தந்தை' என்றழைக்கப்படுகிறார்.
ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புலம் பெயர்ந்தவர் ஓப்பன்ஹெய்மரின் தந்தை. இயற்பியல் துறையில் பல ஆராய்ச்சிகளை நடத்திய ஓப்பன்ஹெய்மர் பற்றி படத்தில் பரபரப்பாகச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள்.
ஜுலை 21ம் தேதியன்று தமிழில் ''கொலை, அநீதி, சத்திய சோதனை, இராக்கதன், அவள் அப்படித்தான் 2, யோக்கியன்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




