'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான படம் ஓப்பன் ஹெய்மர். அணுகுண்ட தயாரித்த விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது.
கிறிஸ்டோபர் நோலன் படங்களிலேயே குறைவான வசூலை கொடுத்த படமும், அதிக விமர்சனத்தை சந்தித்த படமும் இதுதான். என்றாலும் விருதுகளை குவித்து மறுகவனம் பெற்று வசூலில் சாதனை படைத்தது. இப்படம் இந்த ஆண்டு 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை குவித்தது.
இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டாலும் ஜப்பானில் இதுவரை வெளியாகாமல் இருந்தது. காரணம் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அழியவும், 2 லட்சம் மக்கள் பலியாகவும் காரணமாக இருந்த ஓப்பன் ஹெய்மர் படத்தை ஜப்பான் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் படம் அங்கு வெளியாகவில்லை.
என்றாலும் படத்தின் கதைப்படி அணுகுண்டை கண்டுபிடித்ததுதான் ஓப்பன் ஹெய்மரே தவிர அவருக்கு தெரியாமலேய ஜப்பான் மீது குண்டை வீசியது அமெரிக்க அரசாகும். இதற்காக ஓப்பன் ஹெய்மர் மிகவும் வருந்தினார் என்பதுதான் கதை. இதை ஜப்பான் மக்களுக்கு புரிய வைத்த பிறகு இந்த படம் அங்கு வெளியாகிறது. அதற்கு ஏற்றார்போல் அது தொடர்பான காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, போஸ்டர் டிசைன்கள் மாற்றப்பட்டு வருகிற 29ம் தேதி படம் ஜப்பானில் வெளியாகிறது.