என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
2002ம் ஆண்டு முரளி, வடிவேலு, நடிப்பில் வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதா. படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தில் நடித்த ராதா அதன் பின்னர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றியடையாததால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார்.
திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவகாரத்து செய்துவிட்டார். முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த ராதா எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த வசந்த ராஜன் என்பவருடன் நெருக்கமானார். வசந்த ராஜனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் ராதா வசந்தராஜனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் வசந்தராஜன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்தார்.
இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய ராதா தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தனது மகன் தருணுடன் சென்னை சாலிகிராமம், லோகையா காலனியில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் ரிச்சர்ட் என்ற இளைஞருடன் ராதாவுக்கு முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் நடிகை ராதா, தன்னை பிரான்சிஸ் ரிச்சர்ட் கிண்டல் செய்ததாக விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் பிரான்சிஸ் ரிச்சர்ட், தனது உறவினர் ஒருவருடன் ராதா வீட்டுக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தார். பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர். ஆனால் அதன்பிறகும் பிரான்சிஸ் ரிச்சர்ட், நடிகை ராதாவை பற்றி அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரான்சிஸ் ரிச்சர்ட் தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நடிகை ராதா, தனது மகன் தருணுடன் சேர்ந்து பிரான்சிஸ் ரிச்சர்ட்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதால் இருவரும் சேர்ந்து பிரான்சிஸ் ரிச்சர்ட்டை கையாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரான்சிஸ் ரிச்சர்ட் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார் நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.