''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
அமெரிக்க அணு சக்தி விஞ்ஞானியாக இருந்தவர் ஓப்பன்ஹெய்மர். அவரது வாழ்க்கையைத்தான் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் 'ஓப்பன்ஹெய்மர்' என்ற படமாக இயக்கினார். நோலன் இயக்கிய மெமண்டோ, தி டார்க் நைட், இன்பெக்சன், இன்ஸ்டெல்லர், டெனட் படம் அளவிற்கு இந்த படம் பேசப்படவில்லை. கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்த நிலையில் நேற்று நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் விருதுகளை குவித்து சாதனை படைத்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த விருது விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது விழா, பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ஜோ கோய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஒப்பன்ஹெய்மர்' படத்துக்கு சிறந்த டிராமா படத்துக்கான கோல்டன் குளோப் வழங்கப்பட்டது. அதோடு சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை ஆகிய பிரிவின் கீழும் விருது பெற்றது. பெரும்பாலும் கோல்டன் குளோப் விருது பெற்ற படங்களே ஆஸ்கர் விருதை வெல்லும் என்பதால் ஓப்பன்ஹெய்மர் ஆஸ்கர் விருதை பெறும் என்கிறார்கள்.
கோல்டன் குளோப் விருது பட்டியல் வருமாறு:
சிறந்த திரைப்படம் (டிராமா) - ஓப்பன்ஹெய்மர்
சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை (டிராமா) - லிலி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆப் தி ப்ளவர் மூன்)
சிறந்த நடிகர் (டிராமா) - சிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) - புவர் திங்ஸ்
சிறந்த திரைக்கதை - அனாடமி ஆப் எ பால்
சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) - எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) - பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த துணை நடிகை - டாவின் ஜாய் ராண்டால்ப் (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த டிவி தொடர் (டிராமா) - சக்ஸசன்
சிறந்த டிவி தொடர் (மியூசிக்கல்/ காமெடி) - தி பியர்
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை) - லுட்விக் யோரன்ஸோன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) - அனாடமி ஆப் எ பால்
சிறந்த பாடல் - க்வாட் வாஸ் ஐ மேட் பார் (பார்பி - பில்லீ எலீஷ்)
சிறந்த அனிமேஷன் படம் - தி பாய் அண்ட் தி ஹெரோன்
சிறந்த வசூல் சாதனை படம் - பார்பி