''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படம் 'ஓப்பன்ஹெய்மர்'. அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மரின் வாழ்க்கையை சொன்ன படம். கிறிஸ்டோபர் நோலன் படங்களில் கலவையான விமர்சனத்தை சந்தித்த படமும், வசூலில் குறைந்த படம் இதுதான். ஆனால் விருதுகளை குறித்து வருகிறது. 96வது ஆஸ்கர் விருதுக்கு இப்படம் தேர்வாகி இறுதிச்சுற்று வரை அதிக பிரிவுகளில் தேர்வானது. விருது பரிந்துரைக்கான இறுதி பட்டியலில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த தழுவல் கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை உள்பட 13 பிரிவுகளில் தேர்வாகியுள்ளது. இந்த நிலையில் பாப்டா விருதுகளை அள்ளி உள்ளது.
ஆஸ்கர் விருக்கு அடுத்தபடியாக உலக அளவில் பெரிய விருது விழாவாக கருதப்படுவது பிரிட்டீஸ் பிலிம் அகாடமி நடத்தும் பாப்டா திரைப்பட விதுதுகள். 77வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடந்தது. இதில் 'ஓப்பன்ஹெய்மர்' சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என 7 பிரிவுகளின் கீழ் விருதுகள் பெற்றது.
சிறந்த நடிகருக்கான பாப்டா விருதை ஓப்பன் ஹெய்மராக நடித்த சிலியன் மர்பியும், சிறந்த இயக்குனருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலனும் பெற்றுக் கொண்டனர். 'புவர்திங்க்ஸ்' படம் சிறந்த நடிகை, சிறந்த மேக்கப் மற்றும் சிகையலங்காரம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு என 5 விருதுகளை பெற்றது. பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட 'ரைசிங் ஸ்டார்' விருதை 'ப்ரூஸ்' படத்திற்காக மியா மெக்கன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை 'தி ஹோல்டவோர்ஸ்' படத்திற்காக டாவின் ஜாயும் பெற்றனர்.