பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீலீலா. குறுகிய காலத்தில் பிரபலமானாலும் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமையவில்லை. அவரது நடனத்திற்காகவே படங்களில் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்ற பேச்சும் உள்ளது. பொங்கலுக்கு மகேஷ் பாபு ஜோடியாக அவர் நடித்து வெளிவந்த 'குண்டூர் காரம்' படத்தில் ஸ்ரீலீலா நடனமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கில் பிரபலமான ஸ்ரீலீலா, எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். அப்போது அவரது அடுத்த படங்கள் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர். தெலுங்கு, தமிழில் சில புதிய படங்களில் நடிக்க உள்ளதாகவும், அவற்றைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள் என்றும் கூறினார்.
தெலுங்கில் பிரபலமாகி தமிழுக்கு வந்து இங்கு பிரபலமான கதாநாயகிகளின் வரிசையில் ஸ்ரீலீலாவும் இடம் பெறுவாரா ?. முதல் அறிவிப்பும், படமும் வெளியாகட்டும், அதுவரை காத்திருக்க வேண்டும்.