மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட இந்திய படமான '2018'(மலையாளம்) வெளியேற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தற்போது ஆஸ்கர் ரேசில் கலந்து கொள்ளும் படங்களின் இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பிரிவுகளில் கிறிஸ்டோபர் நோலனின் 'ஓபன்ஹெய்மர்' படம் இடம்பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஓப்பன்ஹெய்மர் ஏற்கெனவே 5 கோல்டன் குளோப் விருதுகளை பெற்றது. குறிப்பிடத்தக்கது.
பட்டியல் விபரம் வருமாறு:
சிறந்த படம்: ஓப்பன் ஹெய்மர், பார்பி , கில்லர்ஸ் ஆப் தி பளவர் மூன், பாஸ்ட் லைவ்ஸ் , புவர் திங்க்ஸ், ஹோல்டோவர்ஸ் அமெரிக்கன் பிக்ஷன், மேஸ்ட்ரோ, தி ஜோன் ஆப் இன்டர்ஸ்ட், அனாடமி ஆப் எ பால்.
சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் (ஓபன்ஹெய்மர்), மார்ட்டின் ஸ்கோர்செஸி (கில்லர்ஸ் ஆப் தி பளவர் மூன்), யோர்கோஸ் லாந்திமோஸ் (புவர் திங்க்ஸ்), ஜொனாதன் கிளேசர் (தி ஜோன் ஆப் இன்டர்ஸ்ட்), ஜஸ்டின் ட்ரைட் (அனாடமி ஆப் எ பால்)
சிறந்த நடிகை: லில்லி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆப் தி பளவர் மூன்), எம்மா ஸ்டோன் (புவர் திங்க்ஸ்), கேரி முல்லிகன் (மேஸ்ட்ரோ), சாண்ட்ரா ஹுல்லர்(அனாடமி ஆப் எ பால்), அனெட் பெனிங் (நியாட்)
சிறந்த நடிகர்: சிலியன் மர்பி (ஓபன்ஹெய்மர்), பிராட்லி கூப்பர் (மேஸ்ட்ரோ), ஜெப்ரி ரைட் (அமெரிக்கன் பிக்ஷன்), பால் கியாமட்டி (தி ஹோல்டோவர்ஸ்), கோல்மன் டொமிங்கோ (ரஸ்டின்)
சிறந்த துணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்), எமிலி பிளண்ட் (ஓப்பன்ஹைமர்), ஜோடி ஃபாஸ்டர் (நியாட்), அமெரிக்கா ஃபெரெரா (பார்பி), டேனியல் ப்ரூக்ஸ் (தி கலர் பர்பிள்)
சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹைமர்), ரியான் கோஸ்லிங் (பார்பி), ராபர்ட் டி நீரோ (கில்லர்ஸ் ஆப் தி பளவர் மூன்), ஸ்டெர்லிங் கே பிரவுன் (அமெரிக்கன் பிக்ஷன்), மார்க் ருபாலோ (புவர் திங்ஸ்)
சிறந்த அசல் திரைக்கதை: அனாடமி ஆப் எ பால் , பாஸ்ட் லைவ்ஸ், ஹோல்டோவர்ஸ், மே டிசம்பர்.
சிறந்த தழுவல் திரைக்கதை : அமெரிக்கன் பிக்ஷன், பார்பி, ஓபன்ஹெய்மர், புவர் திங்க்ஸ்,'தி ஜோன் ஆப் இன்டர்ஸ்ட்.
சிறந்த சர்வதேச திரைப்படம் : லோ கேப்பிட்டனோ (இத்தாலி), பெர்பெக்ட் டேஸ் (ஜப்பான்), சொசைட்டி ஆப் தி ஸ்னோ (ஸ்பெயின்), தி டீச்சர்ஸ் லான்ஞ் (ஜெர்மனி), ஜோன் ஆப் இன்ட்ரஸ்ட் (லண்டன்)
சிறந்த அனிமேஷன் படம் : 'தி பாய் மற்றும் தி ஹெரான், எலமென்டல், ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ், ராபர்ட் ட்ரீம்ஸ் .
சிறந்த ஆவணப்படம் : 'டு கில் தி டைகர், போர் டாட்டர்ஸ், எட்டர்னல் மெமரி, போபி ஒயின் : பிபிள்ஸ் பிரசிடன்ட்.
சிறந்த ஒளிப்பதிவு: கில்லர்ஸ் ஆப் தி பளவர் மூன், புவர் திங்க்ஸ், ஓபன்ஹெய்மர், மேஸ்ட்ரோ
சிறந்த பின்னணி இசை: கில்லர்ஸ் ஆப் தி பளவர் மூன், புவர் திங்க்ஸ், ஓபன்ஹெய்மர், அமெரிக்கன் பிக்ஷன்.
இந்த முறை இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை. அதே சமயம் இந்தியாவின் ஜார்கண்ட்டில் 13 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'டு கில் எ டைகர்' என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படத்திற்கான பரிந்துரைப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இயக்குனர் நிஷா பஹுஜா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பெரிய கவனத்தையும் பெற்றுள்ளது.