100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ‛மார்க் ஆண்டனி'. இதில் சுனில், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதை போக்கை கூறும் விதத்தில் குரல் ஒன்றை கொடுப்பதற்காக நடிகர் கார்த்தியை அணுகியுள்ளனர். அவரும் விஷால் தனது நண்பர் முறையில் மார்க் ஆண்டனி படத்திற்கு குரல் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர்கள் படங்களுக்கு முன்னணி நடிகர்களே குரல் கொடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் அதிகமாகி வருகிறது. அந்தவகையில் பொன்னியின் செல்வன் படத்தில் கமல் குரல் கொடுத்தார். மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்தார். இப்போது மார்க் ஆண்டனியின் கார்த்தி குரல் கொடுக்கிறார்.