'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளார். இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து கடந்தவாரம் இவர்களின் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மற்றும் திருமண வரவேற்பு நடந்தது. இதில் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ஜூலை 10ல் திருமணம் நடைபெற்றது. காலை தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மாலையில் திருமண உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பின்பு, கடற்கரையில் அழகான ரொமாண்டிக் கொண்டாட்டமும் நடந்தது. திருமணத்தில் வரலட்சுமி சிவப்பு நிற பட்டு புடவையையும், நிக்கோலாய் பட்டு வேஷ்டி, சட்டையும் அணிந்து இருந்தனர்.
இந்தத் திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நேற்று நடந்த திருமணம் தொடர்பான போட்டோக்களை வரலட்சுமி தரப்பில் இன்று(ஜூலை 11) வெளியிட்டுள்ளனர். அவை வைரலானது.