பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி. இந்த நிலையில் தெலுங்கில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆர்டிஐ என்கிற படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி.
இந்த படத்தில் அவர் ஒரு மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவரது தந்தையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவிசங்கருடன் ஒரு தற்கொலை வழக்கு சம்பந்தமாக நேருக்கு நேர் மோதுவது தான் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவே ஈடி.வி.வின் சேனலின் ஓடிடி தளத்தில் நேற்று (செப் 26) முதல் ஒளிபரப்பாகி உள்ளது.