'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படம் வரும் ஜூலை 12ல் வெளியாகிறது. வர்மக்கலையை முக்கிய அம்சமாக கொண்டுள்ள இப்படத்தில் கமல்ஹாசன், வர்மக்கலையால் எதிரிகளை தாக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், மதுரையை சேர்ந்த மஞ்சா வர்மக்கலை தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட 4வது முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மஞ்சா வர்ம கலை தற்காப்பு பயிற்சி பள்ளி ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில் கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை தற்காப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். கடந்த 1996ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்திற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு படப்பிடிப்பு தளத்தில் வர்ம கலைகளை கற்றுக் கொடுத்தேன்.
'இந்தியன்' படத்தின் 2-ம் பாகத்தின் பட போஸ்டர்களில் நான் ஏற்கனவே சொல்லி கொடுத்த முத்திரையை பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டது. எனது அனுமதி இல்லாமல் 'இந்தியன்-2' படத்தில் வர்மக்கலை முத்திரையை பயன்படுத்தி உள்ளனர். என்னிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். எனது பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. எனவே எனது கோரிக்கையை நிறைவேற்றும் வரை 'இந்தியன்-2' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஜூலை 9ல் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛இந்தியன் 2 திரைப்படம் 800 கோடி ரூபாய் மதிப்பில் வெளியாக உள்ளது. வர்மக்கலை பழமையானது; அகத்தியர் தோற்றுவித்தது. வர்மக்கலைக்கு ஆசான் ராஜேந்திரன் உரிமைகோர முடியாது'' என வாதிட்டார். இதனைக்கேட்ட நீதிபதி, நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் 11ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வெளி மாநிலம், வெளிநாடு என பல்வேறு இடங்களில் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தை தடைசெய்தால் பிரச்சனை ஏற்படும், பண இழப்பீடு ஏற்படும் என பட தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியன் 2 படத்திற்கு தடையில்லை என கூறிய நீதிமன்றம் வழக்கு தொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்தது.