எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியன் 2 திரைப்படம் நாளை (ஜூலை 12) வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் இயக்குனர் ஷங்கர், நடிகர்கள் கமல், சித்தார்த் ஆகியோர் ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். கேரளா சென்று இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்களில் மறைந்த மலையாள குணச்சித்திர நடிகர் நெடுமுடி வேணுவும் ஒருவர். இந்த இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்துள்ளார்.
கொச்சியில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்வில் நெடுமுடி வேணு பற்றி கமல் பேசும்போது, “மலையாள திரையுலகில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக நெடுமுடி வேணு இருந்தார். இன்று நான் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.. அவர் ரொம்பவே ஈசியாக கதாநாயகனாக நடித்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனாலும் ஒரு சிறந்த குணசித்திர நடிகராக அவர் இருந்தார். இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கூட அவருக்கு உடல் நலக்குறைவு பாதிப்பு இருந்தது. அந்த சமயத்தில் என்னிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இந்த படம் வெளியான பிறகு இதை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்று நாங்கள் இருவரும் பேசினோம். இன்று இந்த இடத்தில் நான் நிற்கும்போது அவரும் இங்கே என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் கமல்.