சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

தமிழ் திரையுலகில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகளில் ஒன்று தான் விஷால், வரலட்சுமி சரத்குமார் ஜோடி. இத்தனைக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் மதகஜராஜா என்கிற ஒரே படத்தில் தான் இணைந்து நடித்தார்கள். ஆனால் அந்தப் படத்தில் நடித்த பிறகு தான் இவர்களது நட்பு நெருக்கமாகி பல நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாகவே வந்து சென்று காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்கள். இருவரும் அதை வெளிப்படையாக மறுக்காததால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களோ என்றும் கூட நீண்ட நாட்களாக பேச்சு ஓடியது.
அதன் பிறகு விஷால் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக நிச்சயதார்த்தம் நடந்து பின்னர் திருமணம் நடைபெறாமலேயே நின்று விட்டது. அந்த நிகழ்வுக்குப் பிறகு வரலட்சுமி சரத்குமார், விஷாலிடம் இருந்து ஒதுங்கியவர், பின்னர் சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பரான நிக்கோலஸ் சக்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் விஷால், வரலட்சுமி நட்பு உருவாக காரணமாக அமைந்த மதகஜராஜா திரைப்படம் 12 வருடத்திற்கு பிறகு தற்போது இந்த பொங்கல் பண்டிகையில் வெளியாகி உள்ளது வெற்றி படமாகவும் அமைந்துள்ளது. இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் விஷால், வரலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது வரலட்சுமி குறித்து ரொம்பவே நெகிழ்ச்சியுடன் பேசினார் நடிகர் விஷால்.
இது குறித்து அவர் பேசும்போது, “இத்தனை வருட அன்பான தோழி வரலட்சுமி, ஏதோ பிரிட்ஜில் வைத்தது போல அப்படியே பிரெஷ் ஆக இருக்கிறார். ஒரே ஒரு படம் தான் பண்ணி இருந்தாலும் கூட ஏதோ கல்லூரியில் படித்து நண்பர்களாக இருப்பது போல நாங்கள் பழகுவோம். நான் பல பிரச்னைகளை, தடைகளை சந்தித்து இருக்கிறோம். ஆனால் எப்போதும் அழும் பழக்கம் கிடையாது. கண்ணாடியின் முன் நின்று பேசுவேன். எதையும் தாண்டி சென்று விடலாம் என எனக்கு நானே பேசி தைரியம் சொல்லிக் கொள்வேன். ஆனால் நான் முதன்முறையாக கண்கலங்கியது ஹனுமன் படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சியை பார்த்து அதற்கு தியேட்டரில் ரசிகர்களிடம் கிடைத்த கைதட்டலை பார்த்து நான் கண் கலங்கினேன்” என்று கூறினார்.