நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமலின் மார்கெட் மீண்டும் உச்சத்திற்கு வந்துள்ளது. அவர் அடுத்தடுத்து நடிக்க உள்ள ஒவ்வொரு படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் 2' படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் கமல் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். இதனை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பதாக சமீபத்தில் அறிவித்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்பே வியாபாரம் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ.125 கோடிக்கு வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், விஜய் நடித்துள்ள லியோ படத்தையும் இதே நிறுவனம் தான் இதே விலையில் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.