நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக ப்ரியங்கா நல்காரி நடித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென திருமணம் முடிந்ததால் தொடர்ந்து நடிக்க முடியாமல் சீரியலை விட்டு விலகினார். இதனையடுத்து இனி யார் சீதாவாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், திரைப்பட நடிகையான ஸ்ரீ ப்ரியங்கா, சீதா ராமன் சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். மிக மிக அவசரம் என்ற படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீ ப்ரியங்கா, தமிழில் ஸ்கெட்ச், கொம்பு வச்ச சிங்கமடா உள்ளிட்ட பல படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.