நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛தக் லைப்'. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜுன் 5ல் படம் ரிலீஸாக உள்ளது.
தக் லைப் பட பிரமோஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் கமல்ஹாசன். பக்கத்து மாநிலத்தில் இருந்து மீடியாவை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்து பேட்டி கொடுத்து வருகிறார். விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று படம் குறித்து பேச இருக்கிறார். அப்பா, மகன் மோதல் தான் தக் லைப் கதையாம். அப்பாவாக கமலும், மகனாக சிம்புவும் மோத இருக்கிறார்கள் என்கிறார்கள். மணிரத்னம் இயக்கிய செக்கக் சிவந்த வானம் கூட இப்படிப்பட்ட கரு தான் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
ஆனால், படக்குழுவோ மணிரத்னம், கமல் பல ஆண்டுகளுக்குபின் இணைந்து இருக்கிறார்கள். நீங்கள் யாரும் எதிர்பார்த்திராத பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது. இது ஆக் ஷன் படம் என்றாலும், எமோஷன் நிறைய இருக்கிறது. கமல், சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் கண்டிப்பாக பேசப்படும் என்கிறது. இதற்கிடையே, படத்தின் கரு, முக்கியமான சீன்கள் குறித்து வெளியிடத்தில், பேட்டிகளில் பேசக்கூடாது. எந்த தகவலும் படக்குழு வழியாக மீடியா, மக்களுக்கு சென்று சேரக்கூடாது என்று மணிரத்னம் கறாராக சொல்லியிருக்கிறாராம்.