கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை ராணுவம் எடுத்து வருகிறது. அதோடு மத்திய அரசு பாகிஸ்தான் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்குத் தடை விதித்தும் வருகிறது. அதனடிப்படையில் பாகிஸ்தான் சார்ந்த நிகழ்ச்சிகள், வெப்சீரிஸ், பாடல்கள், பேட்டிகள் ஆகியவற்றை தேசிய பாதுகாப்பு கருதி உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாதத்திற்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு சினிமா, டிவி உள்ளிட்ட கலைஞர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பலரும் இது குறித்த தங்களது ஆதரவையும் பாராட்டுக்களையும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள்.
பாகிஸ்தான் சார்ந்த சமூக வலைத்தளங்கள் பலவற்றிற்கும் ஏற்கெனவே இந்தியாவில் தெரியாதவாறு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஓடிடி தளங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு சில செய்தி சேனல்களில் வெளியாகும் போலியான செய்திகளின் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.