2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாகிஸ்தானிய திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை ஹுமைரா அஸ்கர் அலி என்பவர் கடந்த 2015ல் இருந்து பாகிஸ்தானிய சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சின்னத்திரை தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் சமீப காலமாக பிரபலமாக இருந்த இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் மரணமடைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவருக்கு வயது 33.
இதில் அதிர்ச்சி என்னவென்றால் அவர் இறந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகியுள்ளது. ஆம்.. கடந்த அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அவர் இறந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது கடைசி தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் அந்த தேதியுடன் நின்று உள்ளன. அதன் பிறகு யாரும் அவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
லாகூரை சேர்ந்த ஹுமைரா சினிமாவில் நடிப்பதற்காக ஏழு வருடங்களுக்கு முன்பே கராச்சி வந்து விட்டார். தன்னுடைய குடும்பத்துடன் பெரிய அளவில் தொடர்பு இல்லாத நிலையில் அவ்வப்போது மட்டும் தானே குடும்பத்தினரை சென்று சந்தித்து வந்துள்ளார் ஹுமைரா. இதனால் ஹுமைரா இவ்வளவு நாட்கள் தொடர்பில் இல்லாததை பற்றி அவரது குடும்பத்தினரும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. ஹுமைராவின் வீட்டிற்கு அருகில் இருந்த வீடு காலியாக இருந்ததால் அந்தப்பகுதியில் இருந்தவர்களுக்கும் பெரிதாக துர்நாற்றம் எதுவும் அடித்ததாகவும் தெரியவில்லை.
இப்போது கூட அவர் தான் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சில மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் தான் போலீசார் தற்போது அந்த வீட்டை உடைத்து திறந்து பார்த்தபோது நடிகை ஹுமைரா இறந்து கிடந்த விஷயமே தெரிய வந்துள்ளது. இந்த தகவல் பாகிஸ்தானிய சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.