பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ் | முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகும் 'மரகத நாணயம் 2' | 'ஜனநாயகன்' வழக்கு நாளை, ஜனவரி 20ல் மீண்டும் விசாரணை | யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி | 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் |

ஹிந்தியில் ஆதித்யதார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள படம் 'துரந்தர்'. அவருடன் சாரா அர்ஜுன், சஞ்சய்தத், அக்ஷய் கண்ணா, மாதவன், ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் திரைக்கு வந்த ஒரு வாரத்தில் 218 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்தப் படம் பாகிஸ்தானில் ஆபரேஷன் லியாரின் மற்றும் இந்திய உளவுத்துறையான ரா மேற்கொண்ட ரகசிய பணிகளை அடிப்படையாக கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. அதனால் இந்த படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கதையில் உருவாகி இருப்பதாக கூறி, சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், கத்தார் போன்ற நாடுகளில் இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளார்கள். என்றாலும் இப்படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்பி சினிமாஸில் இந்த துரந்தர் படத்தை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன், படக்குழுவை பாராட்டி ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், 'துரந்தர் படத்தில் நடிகர்களின் வலுவான நடிப்பு, திடமான தொழில்நுட்பம் ஆகியவை பெரிய அளவில் உள்ளது. இப்படத்தின் இசையும் மிகச் சிறப்பாக உள்ளது. ரன்வீர் சிங் மட்டுமின்றி அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோரும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றும் அல்லு அர்ஜூன் பாராட்டியுள்ளார்.