பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

இரு பெரும் இதிகாசங்களான 'ராமாயணம், மகாபாரதம்' ஆகியவற்றைத் தழுவி டிவி தொடர்கள், வெப் தொடர்கள், திரைப்படங்கள் என வந்துள்ளன. 'ராமாயணம்' கதையை பிரபல ஹிந்தி இயக்குனரான நிதிஷ் திவாரி தற்போது 'ராமாயணா' என்ற பெயரில் இரண்டு பாகத் திரைப்படங்களாக எடுத்து வருகிறார்.
ராமாயணத்தை மையமாக வைத்து விதவிதமாக எவை வந்தாலும், 'டிடி நேஷனல்' டிவியில் 1987ம் ஆண்டில் ஒளிபரப்பான 'ராமாயண்' தொடரை மிஞ்சும் அளவுக்கு எதுவும் இதுவரை வரவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் அத்தொடரில் சீதாவாக நடித்த தீபிகா கூறியதாவது, ''ராமாயணத்தை மையமாக வைத்து உருவான ஒரு டிவி தொடரில் கவுசல்யா கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கேட்டார்கள். எனது கணவர் என்னையே முடிவெடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால், எனது சகோதரர், 'நீங்கள் சீதாவாக அறியப்பட்டவர். சாகும் வரை சீதாவாகவே இருக்க வேண்டும், என்று சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது.
இத்தனை ஆண்டு காலமாக ரசிகர்கள் மனதில் நான் சீதாவாகவே இருக்கிறேன். அந்த இமேஜை நான் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும். நான் சீதா தான், அதை ஏற்றுக் கொண்டுள்ளேன். 38 வருடங்களாக மக்கள் என்னை இன்னும் அப்படியேதான் ஞாபகம் வைத்துள்ளார்கள்,'' என்றும் தெரிவித்துள்ளார்.
தீபிகா தமிழில் 'பெரிய இடத்து பிள்ளை, நாங்கள்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.