இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
நடிகை நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரை உலகம் நீண்ட காலமாக 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று புகழ்ந்து பேசி வருகின்றனர். ஆனால், நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனக்கு இந்த பட்டம் வேண்டாம் எனவும், 'நயன்தாரா' என்பதே தனது மனதிற்கு மிக அருகிலுள்ள பெயர் எனவும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதை அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னைத் தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள். நீங்கள் பலரும் என்னை "லேடி சூப்பர்ஸ்டார்" என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை "நயன்தாரா" என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது.. ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும். பட்டங்களும் விருதுகளும் மதிப்பு மிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலை தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.
நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் அன்பின் மொழி நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்திருக்கிறது. எதிர்காலம் எதைக் கொண்டுவந்தாலும், உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதைத் தெரிந்துகொள்வதில் எனக்கு பேரானந்தம். அதேசமயம், உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமாதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது - அதை நாமெல்லோரும் சேர்ந்து கொண்டாடிக்கொண்டே போகலாம். இவ்வாறு நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர் அஜித்குமார், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் தங்களின் பட்டத்தை துறந்து, பெயரை குறிப்பிட அறிவுறுத்தியிருந்தனர்.