அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிறகு கடந்த சில மாதங்களாகவே அது குறித்த செய்திகளில் தான் பரபரப்பாக அடிபட்டு வந்தார். அதேசமயம் இன்னொரு பக்கம் அவர் நடித்து வந்த தண்டேல் திரைப்படம் விறுவிறுப்பாக ரிலீசுக்கு தயாராகி வந்தது. இயக்குனர் சந்து மொண்டேட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி கடல் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டும் ஆந்திர மீனவர்கள் சிலர் பாகிஸ்தான் கடற்படையாள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். நாயகன் நாகசைதன்யா உள்ளிட்டவர்கள் எப்படி அங்கிருந்து மீண்டு வருகிறார்கள் என்பது மையப்படுத்தி தான் இந்த கதை உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கடல் பகுதியில் நடைபெற்றபோது அங்கே ரோந்து வந்த கேரள கப்பற்படை அதிகாரிகள் தண்டேல் படக்குழுவினரை கைது செய்து அழைத்துச் சென்றனராம். அதன் பிறகு அவர்களை விசாரித்து விடுவித்துள்ளனர். இந்த தகவலை சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.




