ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். குறிப்பாக திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை புகழ்பெற்றவர். சமீப வருடங்களாக பாலிவுட்டிலும் படங்களை இயக்கி வருகிறார். அதேசமயம் மோகன்லால் போன்ற முன்னணி ஹீரோக்களை மட்டுமே வைத்து படம் இயக்காமல் ஆசிப் அலி, பஷில் ஜோசப் போன்ற இரண்டாம் நிலை ஹீரோக்களையும் தொடர்ந்து படம் இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். சில மாதங்களுக்கு முன்பு பஷில் ஜோசப் இயக்கத்தில் நுணக்குழி என்கிற காமெடி திரைப்படத்தை திரில்லிங் கலந்து இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஆசிப் அலி நடித்து வரும் மிராகே என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.
இதற்கிடையே திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதை உருவாக்கும் பணிகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம் ஜீத்து ஜோசப். கடந்த 2013ல் பிரித்விராஜ் நடித்த மெமரீஸ் என்கிற படம் மூலம் இயக்குனர் ஆனவர் தான் ஜீத்து ஜோசப். அதன்பிறகு 2016ல் மீண்டும் பிரித்விராஜை வைத்து ஊழம் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெறத் தவறியது. இந்த நிலையில் ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் தனது முதல் பட நாயகன் ஆன பிரித்விராஜ் உடன் கூட்டணி சேர்கிறார் ஜீத்து ஜோசப்.