மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
சந்து மொன்டேட்டி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், நாகசைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'தண்டேல்'. மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து ஒரு காதல் படத்தைக் கொடுத்திருந்தார் இயக்குனர்.
சுமார் 50 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டார்கள். தெலுங்கில் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை இப்படம் பெற்றது. மூன்று மொழிகளையும் சேர்த்து சுமார் 40 கோடி வரையில் இப்படத்தின் வியாபாரம் நடைபெற்றது. 100 கோடி வசூலை இப்படம் நெருங்கி வசூலில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
நேற்றுடன் முடிவடைந்த வசூலில் இப்படம் லாபத்தில் நுழைந்துவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்குத் திரையுலகத்தில் சங்கராந்திக்கு வெளிவந்த 'சங்கராந்திகி வஸ்துனம், டாகு மகாராஜ்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. அந்த வரிசையில் தற்போது 'தண்டேல்' படமும் இணைந்துள்ளது.
'தண்டேல்' படத்தின் நாயகன் நாக சைதன்யாவின் மாமா வெங்கடேஷ் தான் 'சங்கராந்திகி வஸ்துனம்' படத்தின் நாயகன். மாமாவும், மாப்பிள்ளையும் அடுத்தடுத்து வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.