'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. | கதைகளைத் திருடுபவர்களுக்கு இனி கஷ்டகாலம் | பராசக்தி யூனிட்டுக்கு பிரியாணி விருந்து தந்த சிவகார்த்திகேயன் | ரிதம், டைமிங் முக்கியம்... தேவரா பாடலுக்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் மகன்களின் கியூட் ‛ஹான்' | மகாபாரதம் குறித்து அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் : இயக்குனர் லிங்குசாமி | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அக்ஷய் குமார் | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ஹிந்தி படம் | நானியின் ‛ஹிட் 3' படத்தின் டீசர் அப்டேட் வெளியானது | ஹெலிகாப்டர் புரமோஷன் கேட்டாரா டொவினோ தாமஸ்? தயாரிப்பாளர் விளக்கம் | பில்லா ரங்கா பாஷா ரிலீஸ் அப்டேட் வெளியிட்ட கிச்சா சுதீப் : அதிருப்தி குறையாத ரசிகர்கள் |
நித்தம் ஒரு வானம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் சண்முக பிரியன். இவர் புதிதாக நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து 'லவ் மேரேஜ்' எனும் படத்தை இயக்கி உள்ளார். முக்கிய வேடத்தில் கவுதம் மேனன் நடிக்க, இவர்களுடன் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக 'லவ் மேரேஜ்' தயாராகிறது. தாமதமான திருமணம் என்ற சூழலில் போராடும் ஆண்களின் நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.