‛பேபி ஜான்' படம் ‛தெறி' படத்தின் முழுமையான ரீமேக் அல்ல : இயக்குனர் அட்லி | ரஜினி பெரிய நடிகர் என்பதே தெரியாது: சொல்கிறார் நயன்தாரா | வெங்கட் பிரபுவா... சிவாவா... - யாரை டிக் செய்ய போகிறார் அஜித் | பிப்ரவரி மாதத்தில் துவங்கும் தனுஷ் - விக்னேஷ் ராஜா படம் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் | ஜெய் நடிக்கும் ‛பேபி அண்ட் பேபி' | புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை : அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார் | அருண் விஜய்யின் அன்புக்கு தலைவணங்கிய சிவகார்த்திகேயன் | பீம்லா நாயக் புகழ் இசைக்கலைஞர் பத்மஸ்ரீ மொகிலையா காலமானார் | என்னுடன் கூட்டணி சேர்ந்த போதெல்லாம் சந்தோஷ சிவன் தேசிய விருது பெறுகிறார் : மோகன்லால் பெருமிதம் |
இயக்குனர் ஷங்கரின் சீடராக தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி குறுகிய காலத்திலேயே தொடர்ந்து விஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்கள், அதன் அடுத்த கட்டமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஆயிரம் கோடி வசூலித்த ஜவான் திரைப்படம் ஆகியவற்றை இயக்கி இந்திய அளவில் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குனராக மாறிவிட்டார். அவர் அடுத்ததாக படம் இயக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதே சமயம் தற்போது தனது சொந்த தயாரிப்பாக 'பேபி ஜான்' என்கிற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜீவா நடித்த 'கீ' படத்தை இயக்கிய காலிஸ் இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. அதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு தகவல்களை கூறி வருகிறார் இயக்குனர் அட்லி.
அப்படி அவர் கூறும்போது, “பிகில் படத்தில் விஜய்யிடம் ராயப்பன் கதாபாத்திரத்தை பற்றி சொன்னபோது, தந்தை கதாபாத்திரம் என்பதால் தன்னால் அதை சரியாக செய்ய முடியுமா என்கிற தயக்கம் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. அதனாலேயே இதை நாம் பரிசோதனை முயற்சியாக செய்து பார்ப்போம் என்று அவரிடம் கூறி அவரை சம்மதிக்க வைத்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட அந்த கதாபாத்திரம் சிறப்பாக வந்து விட்டது.
அதேபோலத்தான் ஜவான் படத்தில் ஷாருக்கானின் வயதான விக்ரம் ரத்தோட் கதாபாத்திரத்தையும் அவரிடம் சொன்னபோது அவர் என்னிடம் நிச்சயம் ரசிகர்கள் இந்த தந்தை கதாபாத்திரத்தை ரசிக்க மாட்டார்கள், இளைஞன் கதாபாத்திரத்தை தான் விரும்புவார்கள் என்று கூறினார். ஆனால் நடந்ததோ அதற்கு நேர் மாறாக.. படம் பார்த்த பிறகு அவரும் அதை உணர்ந்து கொண்டார். அந்த வகையில் தற்போது இந்த பேபி ஜான் படத்திலும் வருண் தவானை வைத்து ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம். அதுவும் வெற்றிகரமாக ஒர்க் அவுட் ஆகும் என நம்புகிறோம். என்று கூறியுள்ளார்.