கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி | ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | பிளாஷ்பேக்: 2 முறை படமான நல்ல தங்காள் கதை | ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி |

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா 2' படம் மிகப்பெரிய அளவில் வசூலித்து ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் கைவசம், 'குபேரா, கேர்ள்பிரண்ட், சாவா, ரெயின்போ, சிக்கந்தர்' ஆகிய படங்கள் உள்ளன. இதில் குபேரா, கேர்ள்பிரண்ட் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா, இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை 'நான் கதாநாயகியான தருணம்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், 'முந்தைய காலங்களில் நான் மாடல்களையும் நடிகர் நடிகைகளையும் பார்த்து மயங்கிப்போயிருக்கிறேன். நானும் தற்போது அந்த நிலைமையை அடைந்திருப்பதாக நினைக்கிறேன். ஆனால், இதில் முக்கியமானது நமது கடின உழைப்பும் நம்மை அந்தமாதிரி காட்டும் ஆட்களுடன் வேலைசெய்வதும்தான். நிச்சயமாக இதில் எடிட்டிங்கும் பங்கு இருக்கிறது. கேமரா லென்ஸ்க்கு பின்புறம் திறமையான ஆட்கள் வேலை செய்கிறார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.