ராஷ்மிகா பார்த்து வியந்த விஜய் - த்ரிஷா | ‛பேபி ஜான்' படம் ‛தெறி' படத்தின் முழுமையான ரீமேக் அல்ல : இயக்குனர் அட்லி | ரஜினி பெரிய நடிகர் என்பதே தெரியாது: சொல்கிறார் நயன்தாரா | வெங்கட் பிரபுவா... சிவாவா... - யாரை டிக் செய்ய போகிறார் அஜித் | பிப்ரவரி மாதத்தில் துவங்கும் தனுஷ் - விக்னேஷ் ராஜா படம் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் | ஜெய் நடிக்கும் ‛பேபி அண்ட் பேபி' | புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை : அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார் | அருண் விஜய்யின் அன்புக்கு தலைவணங்கிய சிவகார்த்திகேயன் | பீம்லா நாயக் புகழ் இசைக்கலைஞர் பத்மஸ்ரீ மொகிலையா காலமானார் |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் மிகக் குறைவான வரவேற்பே கிடைத்தது. 500 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையைப் புரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட படத்தின் வசூலும், வரவேற்பும் குறைந்தது திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
'இந்தியன் 2' படம் உருவாகும் போதே 'இந்தியன் 3' படத்திற்கான படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இரண்டாம் பாகத்தை விடவும் மூன்றாம் பாகம் மிகவும் சிறப்பாக இருக்கும் என 'இந்தியன் 2' வெளியீட்டிற்கு முன்பே கமல்ஹாசன் பேசியிருந்தார். 2ம் பாகத்திற்கு ஏராளமான நெகட்டிவ் விமர்சனம் வந்த நிலையில் 'இந்தியன் 3' படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிடும் முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் பரவியது.
அதேபோல், 'இந்தியன் 3'ல் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில் சிலவற்றை மாற்றம் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் நேர்காணலில் ஒன்றில் இயக்குனர் ஷங்கர் கூறுகையில், ''இந்தியன் - 2 படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் அதிர்ச்சியளித்தன. அதைக் கருத்தில்கொண்டு இந்தியன் - 3 படத்தை சரிசெய்வேன். மூன்றாவது பாகம் தியேட்டர்களில்தான் வெளியாகும்'', எனத் தெரிவித்துள்ளார்.