விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
'சேது' படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமாகிய இயக்குனர் பாலா, திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. இதை நேற்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடினார். இது பாலாவின் 25வது வருட கொண்டாட்ட விழாவாகவும் அவர் தற்போது இயக்கி விரைவில் வெளியாகவுள்ள வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவாகவும் சேர்ந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு இயக்குனர்கள், நட்சத்திரங்கள் வருகை தந்து கலந்து கொண்டார்கள் என்றாலும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது நடிகர்கள் சூர்யாவும் விக்ரமும் வருவார்களா என்பது தான்.
காரணம் பாலாவின் மூலம் திரையுலகில் திருப்புமுனை பெற்ற இவர்கள் இருவரும் தற்போது பாலாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரிடம் இருந்து பிரிந்து நிற்கின்றனர். குறிப்பாக விக்ரம் மகனை வைத்து பாலா இயக்கிய 'வர்மா' படத்தின் மூலம் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேபோல சூர்யா தானே தயாரித்து பாலா இயக்கத்தில் நடித்த 'வணங்கான்' திரைப்படத்திலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். தற்போது அதற்கு பதிலாக அருண் விஜய் அந்த படத்தில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் இந்த விழாவில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யா தனது தந்தை சிவகுமாருடன் சேர்ந்து வந்து கலந்து கொண்டார்; ஆனால் விக்ரம் வரவில்லை.
இந்த நிகழ்வில் வணங்கான் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. படத்தின் டிரைலர் நன்றாக இருப்பதாக பார்த்த அனைவருமே கூறி வருகிறார்கள். அப்படி டிரைலர் திரையிடப்பட்ட போது அதை பார்த்த சூர்யாவின் முக பாவனைகளை ஸ்கிரீனில் அடிக்கடி காட்டினார்கள். அப்போது சூர்யாவின் முகம் கொஞ்சம் இறுக்கமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த படத்தின் கதையோ காட்சிகளையோ பெரிய அளவில் தெரியாமல் தான் அந்த படத்தில் பாலா சொல்வதை மட்டுமே கேட்டு சில நாட்கள் நடித்து வந்தார் சூர்யா. அதன்பிறகு முழு ஸ்கிரிப்ட் தெரியாமல் நடிக்க முடியாது என்று கூறித்தான் அவர் விலகியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த டிரைலரை பார்க்கும்போதே படமும் நன்றாக வந்திருக்கும் என்பது போல சூர்யா உணர்ந்ததால் தான் அவரது முகம் மாறியது என்றும் சிலர் சொல்கிறார்கள்.