சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

1995ம் ஆண்டில் ஹிந்தியில் ஷாருக்கான், கஜோல் நடிப்பில் வெளியான படம் ‛தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே'. ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்த படம் நான்கு கோடியில் தயாரிக்கப்பட்டு 102 கோடி வசூலித்தது. இப்படம் திரைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி லண்டனில் உள்ள லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், காஜோலுக்கு வெண்கல சிலை வைத்துள்ளார்கள். இது இங்கு வைக்கப்பட்டுள்ள முதல் இந்திய பட வெண்கல சிலையாகும்.
இந்த சிலையின் திறப்பு விழாவில் ஷாருக்கான், கஜோல் ஆகிய இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதுகுறித்த புகைப்படத்தை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷாருக்கான் ஒரு பதிவும் போட்டுள்ளார்.
அதில், ‛‛தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தின் 30வது நிறைவு ஆண்டை கொண்டாடும் வகையில் இன்று லண்டனில் லெஸ்டர் சதுக்கத்தில் ராஜ் - சிம்ரனின் வெங்கல சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். லெஸ்டர் சதுக்கத்தில் காட்சிகள் பாதைகள் சிலையுடன் கவுரவிக்கப்படும் முதல் இந்திய திரைப்படம் இது என்பதில் நம்ப முடியாத அளவிற்கு மகிழ்ச்சி. இதை சாத்தியமாக்கிய இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் மிக்க நன்றி. நீங்கள் லண்டனில் இருக்கும்போது ராஜ் அண்ட் சிம்ரனை சந்திக்க வாருங்கள். தில்வாலே துல்ஹனியா உடன் நீங்கள் இன்னும் பல நினைவுகளை உருவாக்குவதை நாங்கள் காண விரும்புகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.