ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
78வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 13ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் திரையிடத் தகுதியான படங்களை நடுவர் குழு பார்த்து வருகிறது. இதற்காக ஆயிரக் கணக்கான படங்கள் நடுவர்கள் முன் குவிந்துள்ளது. அவற்றில் ஒன்று தமிழ் திரைப்படம் 'மாண்புமிகு பறை'. இந்த படத்தை நடுவர் குழுவினர் பார்த்து பாராட்டி உள்ளனர்.
சியா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் சுபா, சுரேஷ் ராம் தயாரிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் சுகுமார் இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்துள்ளார். படத்தின் நாயகனாக திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ளார். காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, "பறை இசையின் பெருமை சொல்லும் இப்படம் எல்லா இசையும் ஒன்று தான். ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் புகழும் மட்டுமே பறை இசைக்கு கிடைப்பதில்லை, அந்த பறை இசையின் பின்னணியை, வலியை, பெருமையை சொல்லும் படைப்பாக உருவாக்கி உள்ளோம்" என்றார்.