சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு |
ஆஸ்கர் விருது விழாவுக்கு அடுத்ததாக, புகழ்பெற்ற திரைப்பட விழாவாக 'கேன்ஸ் திரைப்பட விழா' நடந்து வருகிறது. இது பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் நகரில் கடந்த 1946 முதல் நடந்து வருகிறது. உலகம் முழுவதிலிமிருந்து திரைக் கலைஞர்கள் குவியும் விழாவாக இது நடந்து வருகிறது. 77வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 15ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. பல்வேறு பிரிவுகளில் பல இந்திய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன. இதில் சிறந்த குறும்படத்துக்கான முதல் பரிசை, இந்திய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய 'சன்பிளவர்' வென்றது. மூன்றாவது பரிசும் இந்திய குறும்படத்திற்கு கிடைத்தது.
இந்த ஆண்டுக்கான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை, 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' என்ற இந்திய திரைப்படம் வென்று சாதனை படைத்தது. 30 வருடங்களுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இது. பாயல் கபாடியா இயக்கிய இதில் மலையாள நடிகைகள் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா நடித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 21 படங்களுடன் போட்டியிட்டு இந்த விருதை வென்றுள்ளது. பாயல் கபாடியாவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல், நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்பட பல்வேறு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதை, இந்தியாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா வென்று சாதனை படைத்துள்ளார். இவ்விருதை பெறும் முதல் இந்தியர் அவர். பல்கேரியன் இயக்குனர் கான்ஸ்டான்டின் போஜனோவ் இயக்கிய 'தி ஷேம்லெஸ்' என்ற படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
சந்தோஷ் சிவனுக்கு விருது
இதே விழாவில், உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் 'பியர் ஆன்ஜனி' விருது, இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக சினிமாவுக்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் 'பியர் ஆன்ஜனி' விருது பெறும் முதல் ஆசிய ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நடிகை, சிறந்த குறும்படங்கள் என இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் இந்தியாவின் கை ஓங்கி இருந்தது. விருது வென்றவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.