'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 'சட்டப்படி குற்றம்' என்கிற படத்தில் அறிமுகமானவர் நடிகை கோமல் சர்மா, அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ், ஷாட் பூட் த்ரீ, பப்ளிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் முதன்முறையாக இயக்கி, நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'பரோஸ்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரக அரசு, கோமல் சர்மாவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. பொழுதுபோக்கு துறையில் இவரது திறமை, அர்ப்பணிப்பு, பங்களிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கோல்டன் விசா அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற நிகழ்வில் கோமலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.
கோமல் சர்மா கூறுகையில், “இப்படி ஒரு கவுரவம் கிடைத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் வெகு சில நட்சத்திரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த இந்த கோல்டன் விசாவை தற்போது எனக்கு வழங்கியதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு மிகப்பெரிய நன்றி. தமிழ்நாட்டை போல இனி துபாயும் எனது இன்னொரு வீடு என்று பெருமையாக சொல்லலாம். இதுபோன்ற கவுரவத்தால் எனது பொறுப்புகள் இன்னும் அதிகமாகவதாக உணர்கிறேன். இது இன்னும் பல நல்ல விஷயங்களை செய்வதற்கு உந்து சக்தியாக அமையும். இதன்மூலம் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என முயற்சிப்பேன்” என்று கூறியுள்ளார்.